;
Athirady Tamil News

முடிவுக்கு வரும் காஸா போர்… இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிப்பு

0

கடந்த 15 மாதங்களாக நீடிக்கும் மிகக் கொடூரமான போருக்கு முடிவில் பணயக்கைதிகளை மொத்தமாக விடுவிக்கும் ஒப்பந்தம் ஒன்றை இஸ்ரேல் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் சில நாட்களில்
ஹமாஸ் படைகளின் பிடியில் எஞ்சியுள்ள அனைத்து பணயக்கைதிகளும் இன்னும் சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதல் முறையாக அறிவித்துள்ளார்.


அத்துடன் பாலஸ்தீன மக்களுக்கு உரிய உதவிகள் அளிக்கப்படும் என்றும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். அடுத்த சில மணிநேரங்கள் மிக முக்கியமானவை எனவும், மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வருவதை அடுத்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒப்பந்தத்தின் இறுதி வரைவு முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுவரை நடந்திராத முன்னேற்றம்
ஏற்பட்டுள்ளதாக முதன்மையான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட 48 மணிநேரத்தில், மொத்த பணயக்கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்றே அமெரிக்க தரப்பில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, ஹமாஸ் படைகள் ஏற்கனவே எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், காஸாவின் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளிலிருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும் என்றும் இந்த ஒப்பந்தம் கோருகிறது.

இஸ்ரேல் பணயக்கைதிகள்
பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டவுடன், இஸ்ரேல் தனது படைகளை காஸாவிலிருந்து வெளியேற்றத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தையில் கத்தார் இரு தரப்பினருக்கும் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் தொடர்பான ஒப்பந்தத்தை முன்வைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில நாட்கள் மட்டுமே ஜனாதிபதி பொறுப்பில் இருக்கும் ஜோ பைடன், தனது இறுதி வெளிவிவகாரக் கொள்கை உரையில் காஸாவின் எதிர்காலம் குறித்து நேர்மறையான கருத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும், பேச்சுவார்த்தைகள் அனைத்தும் பைடன் மற்றும் ட்ரம்பின் குழுவினரால் ஒருங்கிணைக்கப்பட்டதாகவே இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் Gideon Saar தெரிவித்துள்ளார்.

காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய மூன்று நாடுகளும் ஒரு வருடத்திற்கும் மேலாக உழைத்து வந்தன, ஆனால் எந்தப் பலனும் எட்டப்படவில்லை.

இறுதியில் இன்னும் சில நாட்களில் காஸா போர் முடிவுக்கு வர இருப்பதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்புக்கு வரும் முன்னர், இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்படவும், காஸா போர் முடிவுக்கு வரும் என்றும் நம்பப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.