அமெரிக்கா காட்டுத்தீயில் பலியானவர்கள் எண்ணிக்கை 24 ஆக உயர்வு
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
ஈட்டன் தீ விபத்தில் பதினாறு பேரும், பாலிசேட்ஸ் தீ விபத்தில் எட்டு பேரும் கொல்லப்பட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட மருத்துவ பரிசோதகர் தெரிவித்தார்.
இறந்தவர்களாக பட்டியலிடப்பட்டவர்களில் பத்து பேர் அடையாளம் காணப்படவில்லை என்று அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.