;
Athirady Tamil News

ஜேர்மனியில் நெருங்கும் தேர்தல்… போலிச் செய்திகளைப் பரப்பும் அரசியல் கட்சிகள்

0

ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் சில போலிச் செய்திகளைப் பரப்பி வருகின்றன.

போலிச் செய்திகளைப் பரப்பும் அரசியல் கட்சிகள்
ஜேர்மன் நகரமான Magdeburgஇல், டிசம்பர் மாதம் 23ஆம் திகதி, Taleb Al-Abdulmohsen என்னும் நபர் கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதும், 200க்கும் அதிகமானோர் காயமடைந்ததும் நினைவிருக்கலாம்.

ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அந்த சம்பவத்தை அரசியலாக்கும் முயற்சியில் சில கட்சிகள் இறங்கியுள்ளன.

குறிப்பாக, புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான AfD கட்சியின் தலைவர்களில் ஒருவரான Alice Weidel, தாக்குதல் நடத்திய நபர் வெறுப்பால் நிறைந்த ஒரு இஸ்லாமியவாதி என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த தாக்குதல் தொடர்பில் பல போலி வீடியோக்கள் இணையத்தில் உலாவரத் துவங்கியுள்ளன.

அத்தகைய ஒரு வீடியோவில், இஸ்லாமியவாதிகளை பொலிசார் துரத்திச் சென்று கைது செய்வது போல் தோன்றும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

உண்மையில், அது கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலுக்கு முன்பே எடுக்கப்பட்ட வீடியோவாகும். பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களை ஜேர்மன் பொலிசார் கைது செய்வதைக் காட்டும் வீடியோ அது.

இப்படியே, பல போலியான வீடியோக்கள் இணையத்தில் உலாவரத் துவங்கியுள்ளன. அதாவது, ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்கும் முயற்சியில் சில கட்சிகள் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.