சுவிஸ் எல்லையில் பயங்கர பனிச்சரிவில் சிக்கிய மூவர் பலி
சுவிஸ் இத்தாலி எல்லையில், பனிச்சறுக்கு விளையாடச் சென்ற ஐந்துபேர் பயங்கர பனிச்சரிவில் சிக்கிக்கொண்டார்கள்.
அவர்களில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகிவிட்டார்கள்.
பயங்கர பனிச்சரிவில் சிக்கிய மூவர் பலி
சுவிஸ் இத்தாலி எல்லையில் அமைந்துள்ள Piedmont என்னுமிடத்தில் பனிச்சறுக்கு விளையாட ஒரு குழு சென்றுள்ளது.
அவர்கள் 9,300 அடி உயரத்தில் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருக்கும்போது, திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பனிச்சரிவில் சிக்கி மலையிலிருந்து இழுத்துவரப்பட்ட அந்த ஐந்துபேரும் பனிக்குள் புதைந்துள்ளனர்.
உடனடியாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து பனியில் புதைந்துள்ளவர்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
என்றாலும், பனியில் புதைந்தவர்களில் மூன்று பேர் உயிரிழந்துவிட்டார்கள். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.