அம்பாறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தர்!
அம்பாறை – சம்மாந்துறை பகுதியில் வீட்டில் வழமையான செயற்பாட்டில் ஈடுபட்ட வேளையில், மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்றையதினம் (13-01-2025) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் சம்மாந்துறை – மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.