;
Athirady Tamil News

முடிவுக்கு வரும் காஸா போர்… 1650 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க ஒப்புதல்

0

இஸ்ரேல் முன்னெடுத்த 15 மாதங்கள் நீண்ட கடுமையான போர் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், முதற்கட்டமாக 33 பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் படைகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

30 பாலஸ்தீன கைதி

ஜனவரி 19ம் திகதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வரவிருக்கிறது. இதனையடுத்து 6 வாரத்தில் மொத்தம் 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். இதில் பெண்கள், சிறார்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடங்குவார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

பணயக்கைதிகளுக்கு பதிலாக இஸ்ரேல் நிர்வாகம் 1650 வரையான பாலஸ்தீன கைதிகளை சிறையில் இருந்து விடுவிக்க உள்ளது. அதாவது ஹமாஸ் விடுவிக்கும் ஒவ்வொரு பொதுமக்களுக்காக 30 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும்,

அத்துடன் ஒவ்வொரு பெண் ராணுவ வீரருக்கு பதிலாக 50 பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்க ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, இந்த 6 வார காலத்தில் காஸாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக வெளியேறும்.

ராணுவம் வெளியேறும்

முதற்கட்ட போர் நிறுத்தத்தின் 16வது நாள், இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் துவக்கப்படும். இதில் எஞ்சியிருக்கும் அனைத்து பணயக்கைதிகளையும், இஸ்ரேல் ஆண் ராணுவ வீரர்களையும் விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அத்துடன் காஸாவில் இருந்து மொத்தமாக இஸ்ரேல் ராணுவம் வெளியேறும். மூன்றாவது கட்டத்தில் மரணமடைந்துள்ள பணயக்கைதிகளின் சடலங்கள் ஒப்படைப்பு, காஸா பகுதியின் மறுசீரமைப்பு உள்ளிட்டவை துவங்கப்படும்.

இதில் எகிப்து, கத்தார் மற்றும் ஐக்கிய நாடுகள் மன்றம் ஆகியவை கண்காணிக்கும். காஸா பகுதியை பாலஸ்தீன மக்கள் ஆள வேண்டும் என்று சர்வதேச சமூகம் கூறியுள்ளது. ஆனால் இதை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.