;
Athirady Tamil News

புடினை சந்திக்கும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் ஜனாதிபதி

0

ரஷ்யாவுடன் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஜனாதிபதி மாஸ்கோவை வந்தடைந்துள்ளார்.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாடு
உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ஒரு தசாப்தத்திற்கு மேலாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த ரஷ்யா முயன்று வருகிறது.

அதற்காக தலைவர்களுக்கு பாதுகாப்பு ஆதரவை வழங்கி, மேற்கத்திய எதிர்ப்பு உணர்வைத் தூண்டுகிறது என்று கூறப்படுகிறது.

இருதரப்பு ஒத்துழைப்பு
இந்த நிலையில், மத்திய ஆப்பிரிக்க குடியரசு ஜனாதிபதி Faustin-Archange Touadera ரஷ்யாவிற்கு சென்றுள்ளார்.

அவர் மூன்று நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, Touadera வியாழக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) சந்தித்து “இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது” குறித்து விவாதிப்பார் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு உடன் ரஷ்யா நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. அங்கு போரிடும் கிளர்ச்சியாளர் பிரிவுகளுடன் போராடும்போது, Touaderaவின் நிர்வாகத்தை ஆதரிக்க நூற்றுக்கணக்கான ராணுவ பயிற்சியளிப்பவர்களை அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.