ஜேர்மானிய உணவுப் பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்த பிரித்தானியா
ஜேர்மனியில் கோமாரி நோய் கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஜேர்மானிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய பிரித்தானியா தடை விதித்துள்ளது.
பிரித்தானியாவில் கோமாரி நோய் (Foot-and-Mouth) பரவுவதைத் தடுக்க ஜேர்மனியிலிருந்து பன்றிக் கறி, பால் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் இந்த நோய் கண்டறியப்படாதாலும், தடுப்பு நடவடிக்கையாக இத்தடை விதிக்கப்படுவதாகவும், இது நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவும் என்றும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனி, கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக இந்த நோயை தலைநகர் பெர்லினை ஒட்டிய பகுதியில் உள்ள நீர் எருமைக் கூட்டத்தில் கண்டறிந்துள்ளது.
கோமாரி நோய் என்பது மாடுகள், பன்றிகள், ஆடுகள், மீன்கள் மற்றும் இரட்டைச் சொறி கால்களைக் கொண்ட கால்நடைகளில் மிக வேகமாக பரவும் வைரஸ் நோயாகும்.
இது மனிதர்களுக்கு எந்தவித சுகாதார அபாயத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், 2001-ல் பிரித்தானியாவில் ஏற்பட்ட பெரும் பரவல் ஆறு மில்லியனுக்கு மேற்பட்ட கால்நடைகளை கொல்ல வழிவகுத்து. இது விவசாயிகளின் வருவாயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த நோய் பரவல் காரணமாக, ஜேர்மனி இனி ஜேர்மனி கோமாரி நோயிலிருந்து விடுபட்ட நாடாக வகைப்படுத்த முடியாது. இதன் மூலம் சர்வதேச வர்த்தகத் தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மனி தற்போது பன்றி இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் சவால்களை சந்தித்து வருகிறது.
பிரித்தானியாவிற்கு ஜேர்மனி மூன்றாவது பெரிய பன்றிக் கறி ஏற்றுமதியாளராகவும், இரண்டாவது பெரிய பால் பொருட்கள் ஏற்றுமதியாளராகவும் உள்ளது.
பிரித்தானியா 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை ஜேர்மனியிலிருந்து 117,340 மெட்ரிக் டன் பன்றிக் கறியை இறக்குமதி செய்துள்ளது. இதேபோல், பால் பொருட்கள் இறக்குமதி 130,000 டன்களாக இருந்தது.
இந்த தடை, ஜேர்மனிய உணவுப் பொருட்களின் விநியோகத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.