;
Athirady Tamil News

சிரியாவில் இருந்து 3300 அதிநவீன ஆயுதங்கள் பறிமுதல்: இஸ்ரேலின் IDF படை அதிரடி

0

சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான ஆயுதங்களை இஸ்ரேலிய பாதுகாப்பு படை பறிமுதல் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்கள் பறிமுதல்
சிரியாவில் டிசம்பர் 8ம் திகதி ஜனாதிபதி அசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்து அந்நாட்டின் கிளர்ச்சியாளர்கள் படை ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆயிரக்கணக்கான ஆயுதங்களை இஸ்ரேலிய பாதுகாப்பு படை(IDF) பறிமுதல் செய்து இருப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி, சிரிய எல்லைக்குள் செயல்பட்டு வந்த இஸ்ரேலிய வீரர்கள் இதுவரை 3300-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற ராணுவ உபகரணங்களை கைப்பற்றிய உள்ளதாக புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதில் அதிநவீன தொழில்நுட்பம், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், RPG அமைப்புகள், மோட்டார் குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் தளவாட இயக்குநரகத்தின் சிறப்புப் பிரிவு துப்பாக்கிகள் ஆகியவை வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் கூடுதலாக கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் இரண்டு டாங்கிகள் IDF படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் நோக்கம்
இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் குறிப்பாக கோலன் ஹைட்ஸில்(Golan Heights) பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாக 210th “Bashan” படைபிரிவு இந்த பறிமுதல் நடவடிக்கையை அரங்கேற்றியதாக தெரிவித்துள்ளது.

மேலும், அதிநவீன ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களின் கையில் கிடைத்து விடாமல் தடுப்பதும் இந்த பறிமுதல் நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.