;
Athirady Tamil News

ஸ்பெயினில் அமுலுக்கு வந்த புதிய சாலை விதி., பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

0

ஸ்பெயின் நெடுஞ்சாலைகளில் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், பிரித்தானிய சுற்றுலா பயணிகள் அபாரதங்களை தவிர்க்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2026 ஜனவரி 1 முதல், ஸ்பெயினில் சுற்றுலா செல்லும் பிரித்தானிய பயணிகள் புதிய சாலை விதிகளை கடைப்பிடிக்காததால் அபராதத்தை சந்திக்க நேரிடலாம்.

ஸ்பெயின் அரசு அறிவித்துள்ள புதிய சட்டங்களின் படி, வாகனங்களில் பழைய எச்சரிக்கை முக்கோணங்களுக்குப் பதிலாக V-16 மின்னூட்ட ஒளி சிக்னல் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும்.

V-16 மின்சிக்னல் தகுதிகள்
இந்த ஒளி சிக்னல் நேரடி தொலைபேசி நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இது ஒரு கோளாறு அல்லது விபத்து நிகழ்ந்தால், ஒளி சிக்னலால் மற்ற வாகன ஓட்டிகளுக்கும், DGT (Dirección General de Tráfico) எனும் ஸ்பெயின் போக்குவரத்து அமைப்பிற்கும் தகவலை உடனடியாக அனுப்பும்.

மேலும், இது ஒரு கிலோமீட்டர் தூரத்திலும் தெளிவாக காணப்படும்.

அபராதங்கள் மற்றும் ஆபத்துகள்:
இந்த புதிய விதியை பின்பற்றாத வாகன ஓட்டிகள் 80 யூரோக்கள் (£67) முதல் 200 யூரோக்கள் (£169) வரை அபராதம் செலுத்த நேரிடும்.

புதிய ஒளி சிக்னல் உடனடி தகவல் அனுப்புவதால், நெடுஞ்சாலைகளில் மானிட ஆபத்தை குறைத்து, மீட்பு சேவைகள் விரைவாக வர உதவுகிறது.

பிரித்தானிய பயணிகளுக்கு அறிவுரை
ஸ்பெயின் செல்பவர்கள், இந்த புதிய சாலை விதிக்கான தேவைகளை ஏற்கனவே ஆய்வு செய்து, நவீன V-16 சிக்னலை வாகனத்தில் பொருத்திக்கொள்ள வேண்டும்.

இது பயணப் பாதுகாப்பையும் சாலை விதிமுறைகளின் சரியான பின்பற்றலையும் உறுதிசெய்யும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.