அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார் மீது தாக்குதல்
டெல்லியில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5-ம் திகதி நடைபெற இருக்கிறது. அங்கு, ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை நடைபெற்று வருகிறது.
முக்கியமாக ஆம் ஆத்மி, பாஜக இடையே தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், மூன்று கட்சிகளும் மக்களுக்கு பல்வேறு இலவசங்களை அறிவித்து வருகின்றனர்.
ஆம் ஆத்மி மற்றும் பாஜக தலைவர்கள் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதால் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், பிரச்சாரத்திற்கு சென்ற, டெல்லி முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது காரின் மீது கம்பு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜகவினர் தாக்க முயற்சித்தாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.