;
Athirady Tamil News

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; ஆணும் பெண்ணும் கைது

0

இலங்கைக்கு குஷ் போதைப் பொருளை கடத்தி வந்த, ஆணொருவரும் பெண்ணொருவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாங்காக்கில் இருந்து வந்த ஆணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 3 கிலோ 750 கிராம் குஷ் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேவேளை, அதே விமானத்தில் பயணித்த பெண்ணிடம் இருந்து 2 கிலோ 880 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான 31 வயதான ​ஆண், மகாஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், 29 வயதான பெண் கட்டுவன பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.