கிளிநொச்சியில், சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சீருடைத் துணிகள் கையளிப்பு

சீன அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட சீருடைத்துணிகள் நேற்றைய தினம்(20) கிளிநொச்சி மாவட்டத்தில் கையளிக்கப்பட்டன.
குறித்த சீருடைத் துணிகள் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கென கிளிநொச்சியிலுள்ள நான்கு கோட்டங்களுக்கும் கொண்டு வரப்பட்டன.
தொடர்ந்து, சீருடைத்துணிகள் நேற்றைய தினம் பாடசாலை அதிபர்களிடம் விநியோகிக்கப்பட்டது.