நெடுந்தீவு கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் 44 மழழைகளுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு

நெடுந்தீவு கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் 2025 ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் இணைந்து கல்வியை ஆரம்பிக்கவுள்ள 44 மழழைகளுக்கான பாடசாலை சீருடைகள் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் வழங்க வைக்கப்பட்டன.
குறித்த மாணவர்களுக்கான சீருடைகளுக்குரிய நிதி அனுசரனையை வழங்கிய யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகளுக்கு (2005 உயர்தரப்பிரிவு) நெடுந்தீவு பிரதேசசெயலகம் தனது நன்றிகளை பகிர்ந்துகொள்கின்றது.