;
Athirady Tamil News

மனைவியை கொன்று குக்கரில் சமைத்த கணவன்.. ஹைதராபாத்தில் நெஞ்சை நடுங்கவைக்கும் சமபவம்.!

0

ஹைதராபாத் ஆடவர் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, அவரது உடலை பல துண்டுகளாக நறுக்கி பிரஷர் குக்கரில் போட்டு வேகவைத்து, அவற்றை ஏரியில் வீசி தனது குற்றத்தை மறைக்க முயன்றுள்ளார்.

குருமூர்த்தி, 45, என்பவரின் மனைவி காணாமல் போய்விட்டதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவலர்கள் நடத்திய விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த ஜனவரி 16ஆம் தேதி வெங்கட மாதவி, 35, காணாமல் போய்விட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

காவலர்களின் விசாரணையின்போது, வெங்கட மாதவியின் ​​கணவர் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடக அறிக்கையின்படி, அந்த நபர் குளியலறையில் வைத்து மனைவியின் உடலை நறுக்கி, பிரஷர் குக்கரில் சில பாகங்களை போட்டு வேகவைத்துள்ளார்.

பின்னர், அவர் எலும்புகளைப் பிரித்து, ஒருவிதமான பூச்சிகளைப் பயன்படுத்தி அவற்றை அரைத்து மீண்டும் உடல் பாகங்களை வேகவைத்தார்.

மூன்று நாட்களாக சதை மற்றும் எலும்புகளை பல சுற்றுகளாகச் சமைத்த பிறகு, அந்த நபர் அவற்றை ஒரு பைக்குள் அடைத்து அங்குள்ள மீர்பேட் ஏரியில் வீசியதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் ராணுவ வீரரான குருமூர்த்தி தற்போது பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) காவலராகப் பணியாற்றி வருகிறார்.

இந்த ஜோடிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலை எதற்காக, எப்படி நடந்தது என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.