யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அழுத்கடை எண் 5 மேலதிக நீதிபதி பவித்ரா சஞ்சீவனி உத்தரவிட்டுள்ளார்.
34 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வீடு மற்றும் காணி ஒன்றை வாங்கியமை தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேக நபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இன்றுகாலை யோஷித்த ராஜபக்ஷ பெலியத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.