இரண்டாவது சுற்று பிணைக்கைதிகள் விடுவிப்பு: நான்கு இளம்பெண்களை விடுவித்த ஹமாஸ்

ஹமாஸ் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இருதரப்பும் பிணைக்கைதிகளை விடுவித்துவருகின்றனர்.
அவ்வகையில், நான்கு இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகள் ஹமாஸ் அமைப்பால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது சுற்று பிணைக்கைதிகள் விடுவிப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளவர்களில் நான்கு இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.
அடுத்ததாக அடுத்த ஞாயிற்றுக்கிழமை சில இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு நாள் முன்னதாகவே, நான்கு இஸ்ரேலிய இளம்பெண்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
விடுவிக்கப்பட்ட 20 வயதான Karina Ariev, Daniella Gilboa, Naama Levy, மற்றும் 19 வயதான Liri Albag என்னும் இந்த நான்கு இளம்பெண்களும், இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஹமாஸ் அமைப்பால் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
தங்களைச் சூழ துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் அமைப்பினர் நிற்கும் நிலையிலும், அந்த இளம்பெண்கள் நால்வரும், தாங்கள் விடுவிக்கப்படுகிறோம் என்னும் மகிழ்ச்சியில் புன்னகை பூத்தபடி கமெராக்களுக்கு கையசைத்தவண்ணம் நிற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அவர்கள் நான்குபேரும் காசாவில் வைத்து, செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட, அவர்கள் அந்த இளம்பெண்களை இஸ்ரேல் எல்லையில் நிற்கும் இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைக்க அழைத்துச் செல்வார்கள்.