;
Athirady Tamil News

பிரித்தானியாவில் நிகழ்ந்துள்ள மோசமான கார் விபத்து: 3 இளைஞர்கள் உயிரிழப்பு

0

பிரித்தானியாவில் நடந்த கார் விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார் விபத்து
வெஸ்ட் யார்க்ஷயர்(West Yorkshire), வேக்ஃபீல்டுக்கு(Wakefield) அருகில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த கார் விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் மாலை 8:30 மணி அளவில் பிராம்லி சாலையில்(Bramley Lane), வெஸ்ட் பிரெட்டன் அருகே நிகழ்ந்தது. வூலி(Wooley) நோக்கி பயணித்திருந்த கருப்பு நிற சீட் ஐபிசா(Ibiza) கார் சாலையை விட்டு விலகி ஒரு மரத்தில் மோதியது.

காரில் பயணித்த மூன்று பேர், 19 வயதான இரு பயணிகள் மற்றும் 18 வயதான ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்ற இரு பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது, மற்றொருவரின் காயங்கள் அபாயகரமானவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை
மேஜர் கொலிஷன் விசாரணை குழு, விபத்தை கண்டவர்கள் அல்லது விபத்துக்கு முன்பு காரின் ஓட்டத்தை கவனித்தவர்கள் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

துப்பறியும் தலைமை ஆய்வாளர் ஜேம்ஸ் என்ட்விஸ்டில், “இந்த துயர சம்பவத்தில் மூன்று இளம் உயிர்கள் பறிபோயிருப்பதுடன், மற்றொருவர் கடுமையான காயங்களுடன் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நாங்கள் உடன் இருக்கிறோம்” என ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.