முடிவுக்கு வந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன்நிறுத்த வலியுறுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாகவும் மாணவர்களின் மீதுள்ள நியாயங்களின் விளைவாகவும் பொய்யாக புனையப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து மாணவர்கள் அனைவரும் இன்று துணைவேந்தர் தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்களின் பாடத்தெரிவுகள் மற்றும் மாணவர்கள் பழிவாங்கப்படுதல்கள் தொடர்பில் பல்கலைக்கழகப் பேரவை தனது கூடுதல் கவனத்தை வரும் காலத்தில் செலுத்தும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்யும் போது பேரவை உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.