பிரித்தானியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய இயோவின் புயல்: லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடை

சூறாவளி இயோவின் சமீபத்தில் பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூறாவளி இயோவின்
சூறாவளி இயோவின் பரவலான சேதத்தை விளைவித்து இருப்பதுடன், லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது
அயர்லாந்தில் மட்டும் 402,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல் தவித்தன, அதே நேரத்தில் இங்கிலாந்தில் 140,000 வீடுகள் பாதிக்கப்பட்டன.
மின்சாரம் தவிர, அயர்லாந்தில் 120,000 பேர் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் எதிர்கொண்டுள்ளனர். ஸ்காட்லாந்தில், சுமார் 35,000 வீடுகள் மின்சாரம் இழந்தன.
Hurricane "Eowyn" hit the UK and Ireland, leaving over 500,000 households without electricity.
In Ireland, 402,000 homes were left without power, while in the UK, the number reached 140,000. Water supply issues affected 120,000 people in Ireland. In Scotland, around 35,000… pic.twitter.com/kNMUeIFiwy
— NEXTA (@nexta_tv) January 26, 2025
புயலின் சீற்றம் முக்கிய நெடுஞ்சாலைகளை மூட வைத்தது மற்றும் பேருந்துகள், விமானங்கள், கப்பல்கள் மற்றும் ரயில் போன்ற பெரும்பாலான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
சூறாவளி இயோவின் தாக்கத்திலிருந்து மீள முயற்சிக்கும் போதே, புதிய சூறாவளி ஹெர்மினியா(Herminia) விரைவாக நெருங்கி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
#StormÉowyn is proving to be a powerful system
Satellite imagery suggests a sting jet developed early this morning
This brought a 114 mph gust at Mace Head – provisionally the strongest gust ever recorded in Ireland
Learn more about sting jets here
https://t.co/UYBI6l5unx pic.twitter.com/xPZEI79nNP
— Met Office (@metoffice) January 24, 2025
எதிர்வரும் புயல் வலுவான காற்று, பனி மற்றும் பனிமூட்டமான நிலைமைகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த சீர்குலைக்கும் வானிலை ஜனவரி 27ம் திகதி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.