3,000 கொடூர குற்றவாளிகள்… தீக்கிரையாக்கப்பட்ட சிறைச்சாலை: பலர் மரணம்
கோமா நகரில் மிகப்பெரிய சிறை உடைப்பு சம்பவம் நடந்துள்ளதுடன், முற்றுகையிடப்பட்ட நகரம் முழுவதும் கொள்ளை மற்றும் குழப்பம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
தப்பியோடிய கைதிகள்
M23 ஆயுதக் குழு உறுப்பினர்கள் மற்றும் ருவாண்டா துருப்புக்கள் முற்றுகையிட்டு நகரத்திற்குள் நுழைந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு சிறை உடைப்பு நடந்துள்ளது.
ருவாண்டாவின் கிழக்கு எல்லையில் உள்ள காங்கோவின் வடக்கு கிவு பிராந்தியத்தின் தலைநகரமான கோமாவிலேயே குறித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.
2022ல் வெளியான தரவுகளின் அடிப்படையில், கோமாவின் மொத்த மக்கள் தொகை சுமார் இரண்டு மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சிறை உடைப்புக்கு பின்னர் தப்பியோடிய கைதிகள் தெருக்களைச் சுற்றிலும் காணக்கூடியதாக இருந்தது,
மேலும் சுமார் 3,000 கைதிகளை வைத்திருக்கும் சிறைச்சாலை முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டது, இதன் விளைவாக பலர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகரத்தை விடுவித்ததாக
திங்கட்கிழமை அதிகாலை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், நகரத்தின் முதன்மையான பகுதிகளை இன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் காங்கோ அரசாங்கம் கூறியது.
அனால் M23 செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில் போராளிகள் நகரத்தை விடுவித்ததாக அறிவித்துள்ளார். கோமாவை போராளிக் குழு கைப்பற்றியது தொடர்பில் திங்களன்று பிரான்சின் வெளிவிவகார அமைச்சகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.
2021 முதல் M23 கிளர்ச்சிக் குழு கனிம வளம் மிக்க கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசின் பெரும்பாலான பகுதிகளைக் கட்டுப்பாட்டில் எடுத்து ஆக்கிரமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.