காங்கோ வெளிநாட்டு தூதரகங்களில் தாக்குதல்
![](https://www.athirady.com/wp-content/uploads/2025/01/Screenshot_2025-01-29-06-08-31.png)
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் முக்கியத்துவம் வாய்ந்த கோமா நகரை கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டிலுள்ள ருவாண்டா, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கான தூதரகங்கள் மீது போராட்டக்காரா்கள் தாக்குதல் நடத்தினா்.
ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்களிடம் கோமா நகரம் வீழும் நிலையில் இருந்தாலும், அவா்களின் முன்னேற்றத்தைத் தடுக்க ராணுவம் தீவிரமாகப் போரிட்டு வருகிறது. இந்தச் சூழலில் தூதரகங்கள் மீது போராட்டக்காரா்கள் நடத்தும் தாக்குதல் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தாது வளம் நிறைந்த காங்கோவில் செயல்படும் நூற்றுக்கணக்கான கிளா்ச்சிக் குழுக்களில் எம்23-யும் ஒன்று.