;
Athirady Tamil News

எல்லைகள் மூடப்படும்: ஜேர்மனியின் வருங்கால தலைவருக்கு கடும் எதிர்ப்பு

0

ஜேர்மனியில் புலம்பெயர்தலுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறிய அசியல்வாதிக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

ஜேர்மனியில் எல்லைகள் மூடப்படும்
ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அடுத்து ஜேர்மன் சேன்ஸலராக தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என நம்பப்படும் Friedrich Merz, தான் தேர்தலில் வெற்றிபெற்றால், கடுமையான எல்லை மற்றும் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

அனைத்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கும் ஜேர்மன் எல்லை மூடப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஜேர்மனியின் வெளிப்புற எல்லைகளில் நிரந்தரக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்வது, ஷெங்கன் ஒப்பந்தத்தின் ஐரோப்பிய கொள்கைகளுக்கு எதிரானதாகும்.

Merzஇன் திட்டம் ஐரோப்பிய ஒன்றிய கூட்டாளர்களுக்கு துரோகம் செய்யும் செயலாகும் என்று கூறியுள்ளார், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock.

ஜேர்மனியின் பக்கத்து நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவின் சேன்ஸலரான Alexander Schallenbergகும், ஜேர்மனி தனது புலம்பெயர்தல் கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதை வரவேற்பதாகவும், அதே நேரத்தில், ஜேர்மனி ஷெங்கன் விதிகளுக்கு உட்பட்டே நடக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஜேர்மன் பொலிஸ் யூனியனுடைய தலைவரான Andreas Rosskopf, Merzஇன் திட்டம் நிறைவேறவேண்டுமானால், ஆயிரக்கணக்கான பொலிசாரை புதிதாக பணிக்கு எடுத்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டின் எலைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலான கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் லைசன்ஸ் பிளேட் ஸ்கேனர்கள் போன்ற நவீன தொழில்நுட்பம் ஜேர்மனியிடம் போதுமான அளவில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.