மூன்றாம் பாலினத்தவருக்கு அமெரிக்க ராணுவத்தில் சேர தடை: டிரம்பின் அதிரடி உத்தரவு
![](https://www.athirady.com/wp-content/uploads/2025/01/Screenshot_2025-01-29-06-44-09.png)
அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர தடை விதித்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
டிரம்பின் புதிய உத்தரவு
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அடுத்தடுத்து புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
அதே சமயம் மிகப்பெரிய விவாதங்களை கிளப்பக்கூடிய பல திட்டங்களை ரத்து செய்தும் வருகிறார்.
அந்த வகையில், நேற்று மாற்று பாலினத்தவர்களை ராணுவத்தில் சேர்க்க தடை விதிக்கும் புதிய உத்தரவிலும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
முன்னதாக ஜனாதிபதியாக பதவியேற்கும் போது டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என்ற இரண்டு பாலினங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாகவே டொனால்ட் டிரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.