;
Athirady Tamil News

ஐரோப்பிய நாடுகளில் திரும்பப்பெறப்படும் Coca-Cola பானங்கள்., பிரித்தானியாவிலும் சோதனை

0

பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து கோகா-கோலா (Coca-Cola) பானங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் உணவு பாதுகாப்பு ஆணையம் (FSA) இந்த பானங்கள் பிரித்தானிய சந்தைகளில் விற்பனையில் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகிறது.

பெல்ஜியம், லக்சம்பர்க், மற்றும் நெதர்லாந்து நாடுகளில் மேற்கொண்ட பரிசோதனையில், சில கோகா-கோலா பானங்களில் குளோரேட் அதிகமாக உள்ளதை கண்டறிந்ததால் அவற்றை திரும்பப் பெறப்பட்டது.

கோகா-கோலாவின் Europacific Partners இது குறித்து, பிரித்தானியாவில் இதுவரை எந்த நுகர்வோர் புகார்களும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தது.

குளோரேட் என்பது குளோரைன் அடிப்படையிலான சுத்திகரிப்பு ரசாயனம் ஆகும், இது, குறிப்பாக சிறுவர் மற்றும் குழந்தைகளில் iodine குறைபாடை ஏற்படுத்தக் கூடும்.

2015-ஆம் ஆண்டு ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் (EFSA) குளோரேட் அளவுகள் அதிகமாக இருந்தால், குழந்தைகள் மத்தியில் கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

கோகா-கோலா தரப்பில், பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து சந்தைகளிலிருந்து பாதிக்கப்பட்ட Coca-Cola Original Taste, Coca-Cola Zero Sugar, Diet Coke, Appletiser, Sprite Zero போன்ற பானங்கள் சந்தையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.