தினமும் ஒரு கப் சீரக தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?
![](https://www.athirady.com/wp-content/uploads/2025/01/Screenshot_2025-01-29-07-10-57.png)
சமையல் அறைகளில் சீரகம் இருப்பத சாதாரணம். இது உணவிற்கு சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பல ஆாக்கிய நன்மைகளை உடலுக்கு வாரி வழங்குகிறது.
இந்த சீரகம் செரிமானத்தை மேம்படுத்துவதில் இருந்து உடல் எடையை குறைப்பது வரை பல நன்மைகளை வாரி வழங்குகிறது.
இந்த சீரகத்தை உணவில் மட்டுமல்லாமல் தினமும் காலையில் வெறுவயிற்றில் ஒரு கப் ஊற வைத்து அந்த தண்ணீர் அல்லது டீயை குடித்து வந்தால் உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சீரக தண்ணீர்
சீரகத்தில் வைட்டமின் ஈ, ஏ, சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்களும் இதில் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகின்றன. சீரகத்தை வெவ்வேறு வழிகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த சிரகத்தை அவித்து நல்ல வெதுவெதுப்பான நீராக வெறும்வயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகளை பெற்று தரும். இது வயிற்றுக்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.
வயிற்றுவலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு இது பெரிதும் உதவுகின்றது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் சீரக தண்ணீர் காலையில் குடித்து வர வேண்டும்.
அப்படி குடித்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடையும் குறையும்.சீரக விதைகள் செரிமான சாறுகளை சுரக்க காரணமான என்சைம்களை தூண்டி விட உதவுகிறது.
தினமும் இதை சாப்பிட வாய்வு, மலச்சிக்கல், வீக்கம், நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
சீரகத்தில் ஆன்டி வைரஸ் மற்றும் ஆன்டி பாக்டீரியா குணங்கள் உள்ளன, அவை சளி மற்றும் ஆஸ்துமா போன்ற பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கிறது.
சீரகம் சுவாசக் குழாயில் இருக்கும் சளியை தளர்வடைய செய்கிறது. இரத்த சோகை இருப்பவர்கள் சீரகத்தை எடுத்துக்கொள்வது நன்மை தரும்.
காரணம் ஒரு ஸ்பூன் சீரகத்தில் 4 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது எனவே உடலில் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த சீரகம் மட்டுமே மிகுந்த பயனை தரும்.