;
Athirady Tamil News

இலங்கையின் சுற்றுலாத்துறையில் இணைய விரும்பும் நியூசிலாந்து! – பல்கலையில் வைத்து உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

0

அதிகளவான நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையில், சுற்றுலாத்துறை மற்றும் கைத்தொழில், விவசாய உற்பத்தித் துறைகளில் இணைந்து செயற்படுவதற்கு நியூசிலாந்து  ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிற் பைன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்குக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை, மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் டேவிற் பைன் தலைமையிலான உயர்ஸ்தானிகராலய குழு இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையிலான குழுவினரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கை, மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் டேவிற் பைன், சட்டவிரோத புலம்பெயர்வுக் கட்டுப்பாட்டுக்கான தொடர்பு அதிகாரி ப்ரெட் சீஃல்ட்ட் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் கொள்கை ஆலோசகர் சுமுது ஜயசிங்ஹ ஆகியோரும், பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன், பொருளியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் முத்துகிருஸ்ணா சர்வானந்தன் மற்றும் சுற்றுலா, விருந்தோம்பல் கற்கைத் துறையின் நிகழ்சித்திட்டத் தலைவர் பேராசிரியர் சிவானந்தமூர்த்தி சிவேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நியூசிலாந்துக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், விவசாயம் மற்றும் கடற்றொழில், விளையாட்டு மருத்துவம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படக்கூடிய கூட்டுச் செயற்றிட்டங்கள் பற்றி இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நியூசிலாந்து அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான இணைப்பு நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சார்பில் முன்மொழிவொன்றைக் கோரிய இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர், இது தொடர்பில் இணைந்து பணியாற்றுவதற்கான தமது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

மேலதிக படங்கள் : https://we.tl/t-Hj7cuigGKR

You might also like

Leave A Reply

Your email address will not be published.