கடவுச்சீட்டு வழங்கும் முறையில் ஏற்படவுள்ள மாற்றம்: அரசு எடுக்கவுள்ள முடிவு

கடவுச்சீட்டு பிரச்சினையை ஆராய்ந்து அதைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்க நியமிக்கப்பட்ட குழு, அதன் அறிக்கையை சமர்பித்துள்ளது.
குறித்த அறிக்கையானது, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் முடிவு
அதன் பின்னர், பரிந்துரைகளின் படி, கடவுச்சீட்டு வழங்குவதற்கான தற்போதைய நடைமுறையை மாற்றுவதா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், தற்போது காணப்படும் கடவுச்சீட்டு நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக, விரைவான டெண்டர் செயல்முறை மூலம் 500,000 கடவுச்சீட்டுக்களை வாங்குவதற்கான முடிவை அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.