விவசாயிகளுக்கு பணமாக செல்லவுள்ள உரமானியம்
![](https://www.athirady.com/wp-content/uploads/2025/01/Screenshot_2025-01-29-21-17-23.png)
அடுத்த பருவத்திலும் உர மானியம் பணமாகவே வழங்கப்படும் என விவசாயம் மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
2025 சிறுபோக விவசாயத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்க கையிருப்புகளுக்க நெல் இருப்புகளை கொண்டு வந்து வழங்கும்விவசாயிகளுக்கு உத்தரவாத விலைக்கு கூடுதலாக ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.2 வழங்கப்படும் என அண்மையில் நாமல் கருணாரத்ன அறிவித்திருந்தார்.
உத்தரவாத விலை
அத்தோடு, விவசாயிகள் குறிப்பிட்ட அளவு நெல்லை அரசு கையிருப்புகளை கொண்டு வந்து வழங்க வேண்டும் என அவர் கோரிக்கையொன்றையும் முன்வைத்திருந்தார்.
எனினும், சந்தையில் அதிக அளவு நெல் இல்லாதது உத்தரவாத விலையை நிர்ணயிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.