தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மரணம்
![](https://www.athirady.com/wp-content/uploads/2025/01/Screenshot_2025-01-29-23-21-10-663x430.png)
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராசா (வயது 82) வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.