;
Athirady Tamil News

உலகின் சிறந்த புத்திசாலி நாடுகள்., ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம்

0

உலகின் முதல் 10 சிறந்த புத்திசாலி நாடுகள் எவை என்பதை இங்கே பார்க்காலம்.

இப்பட்டியலில் பத்தில் 9 இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன.

உலகின் புத்திசாலி நாடுகளைத் தேர்வு செய்வது எளிதான செயல் அல்ல. ஆனால் World of Card Games வெளியிட்ட புதிய ஆய்வு இந்த விஷயத்தில் ஒரு சிறப்பான தரவரிசையை வழங்கியுள்ளது.

Nobel Prize Organization, World Population Review, U.K. Office for National Statistics மற்றும் U.S. Census Bureau போன்ற மதிப்புமிக்க தரவுகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

புத்திசாலி நாடுகளின் தரவரிசை

  1. சுவிட்சர்லாந்து
  2. பிரித்தானியா
  3. அமெரிக்கா
  4. நெதர்லாந்து
  5. பெல்ஜியம்
  6. ஸ்வீடன்
  7. ஜேர்மனி
  8. போலந்து
  9. டென்மார்க்
  10. பின்லாந்து

இந்த ஆய்வின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து (Switzerland) 92.02/100 மதிப்பெண்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இது புத்திசாலித்தனத்திற்கான பல காரணிகளை உள்ளடக்கியது:

– 1,099 நொபல் பரிசு பரிந்துரைகள்

– 99.24 IQ சராசரி

– 40.02% பேர் குறைந்தது பட்டம் (Bachelor’s degree) பெற்றுள்ளனர்

– 18.05% பேர் மாஸ்டர் பட்டம் (Master’s degree) பெற்றுள்ளனர்

ஐரோப்பாவின் ஆதிக்கம்
இந்த பட்டியலில் ஐரோப்பிய நாடுகள் பெரும் இடத்தை பிடித்துள்ளன.

அமெரிக்கா (USA) மட்டுமே ஐரோப்பாவிற்கு வெளியே இருந்தும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

பிரித்தானியா (UK) இரண்டாம் இடம் பெற்றுள்ளது, இதற்கு முக்கிய காரணம் 2,393 நொபல் பரிசு பரிந்துரைகள் மற்றும் IQ 99.12 ஆகும்.

நெதர்லாந்து (Netherlands) நான்காம் இடத்தில் உள்ளது, இது 100.74 IQ சராசரி கொண்டுள்ளது. ஜேர்மனி (Germany) உயர் IQ மற்றும் நொபல் பரிசு பரிந்துரைகள் அதிகம் இருந்தாலும், குறைந்த பட்டப்படிப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை காரணமாக முன்னணியில் இல்லை.

இந்த தரவரிசை புத்திசாலித்தனத்தை அளவிட பல்வேறு காரணிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.