மனித மலத்திலுள்ள பாக்டீரியாவிலிருந்து மருந்து: சுவிஸ் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு

நீங்கள் மருத்துவம் தொடர்பான விடயங்களை இணையத்தில் தேடுபவர்களாக இருந்தால், சமீப காலமாக, குடல் சார்ந்த சில பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, மனித மலத்திலுள்ள பாக்டீரியாவை பயன்படுத்துவதைக் குறித்த வீடியோக்கள் வெளியாகி வருவதைக் கவனித்திருக்கலாம்.
இந்நிலையில், சுவிஸ் மருத்துவமனை ஒன்று, மனித மலத்திலுள்ள பாக்டீரியாவிலிருந்து மருந்து தயாரிக்க அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகரில், கடுமையான குடல் பாதிப்புடையவர்களுக்கு, மனித மலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாக்டீரியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், Vaud பல்கலை மருத்துவமனை, மனித மலத்திலுள்ள பாக்டீரியாவிலிருந்து மருந்து தயாரிக்க அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ளது.
வெறுமனே ஆன்டிபயாட்டிக்குகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையைவிட, இந்த மனித மலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாக்டீரியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை, 95 சதவிகித பலனைக் கொடுப்பதாக Vaud பல்கலை மருத்துவமனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.