;
Athirady Tamil News

கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள குழந்தைக்குள் வளரும் கரு – மிரண்ட மருத்துவர்கள்!

0

பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்குள் கரு வளரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிசுவுக்குள் கரு
மகாராஷ்டிராவில் புல்தானா மாவட்டத்தின் அரசு பெண்கள் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 9 மாத கர்ப்பிணி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவருக்கு சோனோகிராபி செய்தபோது அவரின் கருவில் முழு வளர்ச்சியடையாத கரு வளர்வது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் பிரசாத் அகர்வால் கூறுகையில்,

ஆரம்பத்தில் நான் ஆச்சரியமடைந்தேன், பின்னர் கவனமாக ஸ்கேனை மறுபரிசீலனை செய்தேன். இது முந்தைய சோனோகிராஃபியில் தவறவிடப்பட்டது. ஏனெனில் இது மிகவும் அரிதான நிலை. இதுபோன்ற ஒரு நிலை இருக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்ய முடியாது.

அரிய நிகழ்வு
எனவே, நான் இரண்டு மருத்துவர்களிடம் விரிவான ஆலோசனைக்கு பின் அதை உறுதி செய்தேன் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை உலகில் வெறும் 200 பேருக்கு மட்டுமே இதுபோல நிகழ்ந்துள்ளது. 5 லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே நடக்கக்கூடிய நிகழ்வு. இந்த நிலைக்கான சரியான காரணம் எதுவும் கூறப்படவில்லை. ஆனால், இது ஒரே மாதிரியான இரட்டையர்களின் வளர்ச்சியின் போது நிகழும் ஒழுங்கின்மையின் விளைவு என கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.