கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர்!

குளவிக்கொட்டுக்கு இலக்கான 9 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, கண்ணகிபுரம் பகுதியில் வீதியில் இருந்த குளவிக்கூடு கலைந்தமையால், வீதியால் சென்ற பாடசாலை மாணவர்கள் 9 பேரும், வீதியால் பயணித்தவர்கள் மேலும் 6 பேரும் கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்ணகிநகர் அம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.