யாழில். கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான மாணவன் மறுவாழ்வு மையத்திற்கு

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான பாடசாலை மாணவனை புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்புமாறு யாழ் , நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பாடசாலை மாணவன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டான்.
விசாரணைகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை என ஐந்துக்கும் மேற்பட்ட குற்றங்களில் மாணவன் ஈடுபட்டுள்ளமையை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மாணவனை யாழ் . மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்ப மன்று உத்தரவிட்டது.