அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியடிகளின் 77 வது சிரார்த்த தினம்

அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியடிகளின் 77 வது சிரார்த்த தினம் இன்றையதினம்(30.01.2025) அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி மற்றும் அரியாலை காந்தி சனசமூக நிலையம் ஆகிய இடங்களில் உள்ள காந்தி திருவுருவ சிலைகளுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.சங்கத்தின் தலைவரும் வவுனியா பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் சு. மோகனதாஸ்,காந்தீயம் பத்திரிகை ஆசிரியரும் நிர்வாக சபை உறுப்பினருமான எம்.ஷாந்தன் சத்தியகீர்த்தி, ஓய்வுநிலை அதிபர்களான க.செல்வக்குமாரன், செ.சுப்பிரமணியம் ஆகியோர் உட்பட சங்கத்தின் உறுப்பினர், பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். சங்கத்தின் அதிகாரபூர்வ ஏடான காந்தீயம் பத்திரிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.