மண்ணுக்குள் புதையுண்ட வாகனங்கள் வீடுகள்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஹங்குரன்கெத்த பிரதேச செயலாளர் பிரிவின் ரிக்கில்லகஸ்கட, ஹேவாஹெட்ட, கோனபிட்டிய மேரி கோல்ட் பகுதியில் மண்சரிவில் வீடு மற்றும் வாகனங்கள் பல சேதமடைந்துள்ளன.
நேற்று (29) இரவு பெய்த கனமழை காரணமாக இன்று (30) காலை இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் வீடுகளுக்குள்ளும் பாரியளவு மண் நிரம்பியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.