நாளை யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி அனுர

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாளை (ஜனவரி 31 யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி தனது விஜயத்தின் போது வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி பிரதேசங்களில் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன் நாளை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இதேவேளை, வடக்கு-கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று (ஜனவரி 29) ஆரம்பித்துள்ளது.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாக பல அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்த போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 21000 பட்டதாரிகள் வேலையின்றி இருப்பதாகவும் பட்டதாரிகளுக்கு போட்டிப் பரீட்சையின்றி வேலைவாய்ப்பை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.