அமெரிக்காவில் நடந்த பயங்கரமான விமான விபத்து: அதிர்ச்சியூட்டும் புதிய வீடியோ காட்சிகள்!

அமெரிக்காவில் ஜெட் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் மோதிக் கொண்ட விபத்து சம்பவத்தின் புதிய வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன.
துயரகரமான விமான விபத்து
அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை கான்சாஸ் மாகாணத்திலுள்ள Wichita நகரிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, விர்ஜினியாவிலுள்ள ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்துக்கு அருகே ராணுவ ஹெலிகொப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது பயணிகள் விமானத்தில் 64 பேரும், ராணுவ ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் இருந்த நிலையில், உயிரிழந்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விபத்துக்குள்ளான விமானம் Potomac நதியில் விழுந்த நிலையில் இதுவரை 41 நபர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய வீடியோ காட்சிகள்
இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள வீடியோ காட்சிகள், வாஷிங்டன் D.C. அருகே ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு(Reagan National Airport) அருகில் Potomac நதிக்கு மேலே பயணிகள் ஜெட் விமானமும் இராணுவ ஹெலிகாப்டரும் மோதிய தருணத்தை வெளிப்படுத்துகின்றன.
Another video has emerged showing the collision between a passenger plane and a military helicopter near Reagan Airport in Washington.
As a result of the crash, all passengers and crew aboard both aircraft were killed—a total of 67 people. pic.twitter.com/RPkgrUNjRF
— NEXTA (@nexta_tv) January 31, 2025
விமான நிலைய பாதுகாப்பு கேமராக்களால் பிடிக்கப்பட்ட இந்த காட்சிகள், நடுவானில் ஏற்பட்ட மோதலின் இரண்டு தெளிவான கோணங்களைக் காட்டுகின்றன.
விசாரணை அதிகாரிகள் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் விமான தரவு ரெக்கார்டரை வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளனர்.