;
Athirady Tamil News

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் மீண்டும் பரபரப்பு: குவிந்த பொதுமக்கள்

0

ஜேர்மன் நாடாளுமன்றத்துக்கு, வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை புரிந்துள்ளார்கள்.

அத்துடன், நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் காண, பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் குவிந்துள்ளார்கள்.

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் மீண்டும் பரபரப்பு
ஜேர்மன் நாடாளுமன்றம் இப்படி பரபரப்படையக் காரணம், இன்று மீண்டும் புலம்பெயர்தல் தொடர்பான ஒரு சட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க இருக்கிறார்கள்.

ஏற்கனவே, புதன்கிழமையன்று, ஜேர்மனியின் பிரதான எதிர்க்கட்சியான CDU/CSU கட்சிகளின் கூட்டணி, புலம்பெயர்தல் மற்றும் புகலிட விதிகளை கடுமையாக கட்டுப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை முன்வைத்தது.

புலம்பெயர்தல் எதிர்ப்பு, வலதுசாரிக் கட்சியான Alternative für Deutschland (AfD) கட்சி அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க, ஜேர்மன் வரலாற்றில் முதன்முறையாக வலதுசாரிக் கட்சி ஒன்றின் உதவியுடன் பிரேரணை ஒன்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

மீண்டும் புலம்பெயர்தல் தொடர்பான ஒரு சட்டம்
இந்நிலையில், புலம்பெயர்தல் தொடர்பிலான, ‘influx limitation law’ என்னும் சட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது.

அதைக் காண்பதற்காக நாடாளுமன்றத்துக்குள் செல்ல, பொதுமக்கள் வரிசையில் நிற்கும் அசாதாரண காட்சிகள் வெளியாகியுள்ளன.


இந்த மசோதாவையும் CDU/CSU கட்சிகளின் கூட்டணிதான் முன்வைத்துள்ளது.

முந்தைய மசோதாவுக்கு ஆதரவளித்த புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான Alternative für Deutschland (AfD) கட்சி, இந்த மசோதாவுக்கும் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பின் ‘influx limitation law’ சட்டம் தொடர்பிலான மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதால்தான் ஜேர்மன் நாடாளுமன்றம் இன்று பரபரப்பாக காணப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.