;
Athirady Tamil News

பால்டிக் கடலில் சேதமடைந்த பைபர் கேபிள்கள்: ரஷ்ய குழுவினருடன் 2வது கப்பல் பறிமுதல்

0

கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள கேபிளை சேதப்படுத்தியது தொடர்பான விசாரணையில், பால்டிக் கடலில் 2வது கப்பலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

2வது கப்பல் பறிமுதல்
பால்டிக் கடல் பகுதியில் நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள கேபிளில் ஏற்பட்ட கடுமையான சேதத்தை தொடர்ந்து, நார்வேஜியன் சரக்குக் கப்பலான “சில்வர் டானியா”-வை (Silver Dania)நார்வேஜியன் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அனைத்து ரஷ்ய குழுவினரையும் கொண்ட இந்தக் கப்பல், லாட்வியன்(Latvian) அதிகாரிகளின் கோரிக்கையையும், நார்வேஜியன் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டது.

லாட்வியாவின் வென்ட்ஸ்பில்ஸ்(Ventspils) முதல் ஸ்வீடன் தீவான கோட்லாண்ட்(Gotland) வரை செல்லும் ஃபைபர் ஆப்டிக் கேபிளில் ஏற்பட்ட சேதம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

சில்வர் டானியா வியாழக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டு, வெள்ளிக்கிழமை நார்வேஜியன் கடலோர காவல்படையினரால் விரிவான ஆய்வுக்காக ட்ராம்சோ துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், “லாட்வியாவுக்கும் ஸ்வீடனுக்கும் இடையில் பால்டிக் கடலில் உள்ள ஃபைபர் கேபிளுக்கு கப்பல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது,” என்று நார்வேஜியன் பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றச்சாட்டை மறுத்த உரிமையாளர்
பொலிஸ் வழக்கறிஞர் ரோனி ஜோர்கென்சன்(Ronny Joergensen) நடத்திய செய்தியாளர் சந்திப்பில், “சில்வர் டானியாவில் உள்ள யாரோ ஒருவர் கேபிள் சம்பவத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

கப்பலின் உரிமையாளரான சில்வர் சீ ஷிப்பிங் குழுமம்(Silver Sea shipping group), கேபிள் சேதத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறி குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது என்று நார்வேஜியன் ஒளிபரப்பாளர் டிவி2 அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.