;
Athirady Tamil News

லண்டனில் தெருக்களில் வசிப்பவர்கள் எண்ணிக்கை 26% அதிகரிப்பு: புதிய அதிர்ச்சி தரவுகள்

0

2024ல் லண்டனில் வீடற்று சாலையில் இருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய தரவுகள்
லண்டனில் ஒருங்கிணைந்த வீடற்றோர் மற்றும் தகவல் வலையமைப்பு 2024 ஆம் ஆண்டின் இறுதியில் தெருக்களில் தூங்கும் நபர்களின் எண்ணிக்கையில் ஆண்டுக்கு ஆண்டு 5% அதிகரிப்பு இருப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2024 இன் இறுதி காலாண்டில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை), லண்டனில் வீடற்ற மக்களுடன் பணிபுரியும் மீட்புக் குழுக்கள் 4,612 பேரை வீடற்றோரை எண்ணியுள்ளது.

இவர்களில் தோராயமாக பாதி பேர் மனநலத் தேவைகளைக் கொண்டவர்களாக மதிப்பிடப்படுகிறார்கள்.

ஒட்டுமொத்த வீடற்றோர் எண்ணிக்கை அதிகரித்தாலும், குறிப்பாக கவலை அளிக்கும் புள்ளிவிவரம் என்னவென்றால், தெருக்களில் வசிப்பவர்களாகக் கருதப்படுபவர்களின் எண்ணிக்கையில் 26%(மொத்தம் 704 பேர்) அதிகரித்துள்ளது.

இருப்பினும், ஒரு சிறிய சாதகமான செய்தியாக முதன்முறையாக(first time) வீடற்ற நிலையை அனுபவிப்பவர்களின் எண்ணிக்கை 7% குறைந்துள்ளது.

வீடற்றோர் தொண்டு நிறுவனமான செயின்ட் முங்கோஸின் தலைமை நிர்வாக அதிகாரி எம்மா ஹடாட், லண்டனின் வீடற்றோர் புள்ளிவிவரங்களில் தொடர்ச்சியான அதிகரித்து வருவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

இந்த புள்ளிவிவரங்கள் முன்பு இந்த துறையில் பணிபுரியும் அமைப்புகளால் “வெட்கக்கேடானது” என்று விவரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில், லண்டனின் உள்ளூர் அதிகாரிகள் வீடற்ற நிலையைச் சமாளிக்க, முக்கியமாக தற்காலிக தங்குமிடம் வழங்குவது ஆகியவற்றிற்காக தினமும் 4 மில்லியன் பவுண்டுகள் செலவழிப்பதாக தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.