தமிழர் பகுதியில் கோர விபத்து ; இருவர் பலி …35 பேர் காயம்

திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் இன்று(01) காலை பயணிகள் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
இந்நிலையில் ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக தற்போதைய தகவல்கள் கூறுகின்றன.