;
Athirady Tamil News

மகிந்தவுக்கு எதிராக சட்டத்தை பிரயோகிக்க தயாராகும் அரசு

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. .

இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கான இல்லத்திலிருந்து வெளியேறுமாறு உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் அறிவிக்கப்பட்ட போதும், அதற்கான எந்தவித நடவடிக்கையும் மகிந்த தரப்பில் இதுவரை எடுக்கப்படவில்லை.

உத்தியோகபூர்வ இல்லம்
இந்நிலையில் அவரை கொழும்பு விஜேராம மாவத்தையில் உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி அவர்களே இப்போதே வீட்டை விட்டு சென்று விட்டால் கௌரவமாக செல்ல முடியும். இல்லையேல் சட்ட ரீதியாக செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.