உக்ரைனை குறிவைத்து ரஷ்யா நடத்திய திடீர் தாக்குதல்: பெண் உட்பட 6 பேர் வரை உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய சமீபத்திய தாக்குதலில் பெண் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
இருப்பினும், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது.
Last night, Russia launched an attack on our cities using various types of weapons: missiles, attack drones, and aerial bombs. Another wave of terrorist crimes.
In Poltava, a residential building was hit, a section of the building was completely destroyed. Ten people were… pic.twitter.com/1FQAf4bfql
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) February 1, 2025
உக்ரைனின் பெரிய நகரங்கள் மீது ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
6 பேர் வரை உயிரிழப்பு
இந்நிலையில், சமீபத்தில் ரஷ்ய ராணுவம் பொல்டாவா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் 5 பேர் வரை உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
மேலும், உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உக்ரைன் தாக்குதல்
உக்ரைன் ராணுவமும் ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் ஒன்பது டிரோன்களை இடைமறித்து அழித்துள்ளனர்.