ஆற்றிலிருந்து இரண்டாவது உடல் மீட்பு: 2 சகோதரிகள் காணாமல் போன சம்பவத்தில் திருப்பம்

அபெர்டீனில்(Aberdeen) காணாமல் போன இரண்டு சகோதரிகளை தேடும் பணியில், இரண்டாவது உடல் மீட்கப்பட்ட துயரமான முடிவு வந்துள்ளது.
32 வயதான எலிசா மற்றும் ஹென்றிட்டா ஹுஸ்ட்டி ஆகிய இருவரும் கடைசியாக ஜனவரி 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:12 மணியளவில் விக்டோரியா பாலத்தில் உள்ள மார்க்கெட் தெருவில் சிசிடிவி காட்சியில் பார்க்கப்பட்டுள்ளனர்.
அதில், அவர்கள் பாலத்தைக் கடந்து Dee ஆற்றின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் வலப்புறம் திரும்பி, அபெர்டீன் படகு கிளப்பை நோக்கிச் செல்வது காட்சியில் தெரிந்தது.
பொலிஸ் ஸ்காட்லாந்தின் விரிவான தேடுதலுக்குப் பின்னர், நேற்று இரவு 9:05 மணியளவில் Dee ஆற்றில் இருந்து ஒரு உடல் மீட்கப்பட்டது.
முறையான அடையாளம் காணுதல் நிலுவையில் இருந்தாலும், சகோதரிகள் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஹென்றிட்டா ஹுஸ்ட்டி என்று நம்பப்படும் மற்றொரு உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட பிறகு இந்த கண்டுபிடிப்பு வந்துள்ளது.
சகோதரிகள் காணாமல் போனது மிகப்பெரிய பொலிஸ் நடவடிக்கைக்கு வழிவகுத்தது.
தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அவர்களின் மறைவுக்கு “வெளிப்படையான சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை” என்று அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர்.