;
Athirady Tamil News

பிலடெல்பியா விமான விபத்து: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 7-ஆக அதிகரிப்பு

0

பிலடெல்பியாவில் நடைபெற்ற விமான விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலடெல்பியா விமான விபத்து
மருத்துவ சிகிச்சை பெற்ற சிறுமி, அவரது தாய் மற்றும் நான்கு விமான ஊழியர்களை ஏற்றிச் சென்ற லியர்ஜெட் 55 ரக விமானம் வெள்ளிக்கிழமை குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. பிலடெல்பியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் இதுவரை ஏழு பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு இளம் மெக்சிகன் சிறுமியும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது.

இவர்களுடன் 19 பேர் இந்த விமான விபத்தில் காயமடைந்துள்ளனர்.

ஆரம்பத்தில், ஆறு பேர் உயிரிழந்ததாகவும், அனைவரும் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருந்தனர்.

பிலடெல்பியா மேயர் செரில் பார்க்கர் சனிக்கிழமையன்று உயிரிழப்பு எண்ணிக்கை 7-ஆக உயர்ந்ததை உறுதி செய்துள்ளார்.

அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருவதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி இரங்கல்
மெக்சிகன் அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம் தனது இரங்கலை சமூக ஊடகங்களில் தெரிவித்தார். இந்த விபத்து குறித்து ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) மற்றும் நேஷனல் டிரான்ஸ்போர்டேஷன் சேஃப்டி போர்டு (NTSB) ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த அமைப்புகள் ஏற்கனவே இந்த வார தொடக்கத்தில் வாஷிங்டன் டி.சி அருகே ரீகன் தேசிய விமான நிலையத்தில் பயணிகள் ஜெட் விமானம் மற்றும் இராணுவ ஹெலிகாப்டர் மோதிய மற்றொரு fatal விமான விபத்தையும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.