பிரித்தானியாவில் சாலை விபத்து: 4 பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவின் கோல்செஸ்டரில் நடந்த கோர விபத்தில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
வாகன விபத்து
பிரித்தானியாவின் கோல்செஸ்டரில் அதிகாலை நேரிட்ட ஒரு கோர வாகன விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
எசெக்ஸ்(Essex) காவல்துறை சனிக்கிழமை அதிகாலை 4:40 மணிக்கு சற்று முன்பு மாக்டலின்(Magdalen) தெருவில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது.
இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் இப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகள் மூலம் உதவி வருகின்றனர்.
வாகனம் கட்டிடத்தில் மோதியதால் சாலை பிற்பகல் வரை தற்காலிகமாக மூடப்பட்டது.