;
Athirady Tamil News

கடல் வளத்தை பாதுகாக்க பொறிமுறைகளை உருவாக்குவோம்

0

இலங்கையின் கடல் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும். அதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

தமது பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மீனவர்கள் இளைப்பாறுவதற்கு உரிய வசதிகள் இல்லை, உரிய வகையில் நங்கூரமிடும் ஏற்பாடு உட்பட கடற்றொழிலை உரிய வகையில் முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்துதருமாறும் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை, ரோலர் படகு பயன்பாடு உள்ளிட்டவற்றால் தமக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகள் பற்றியும் அமைச்சரிடம் முறையிட்டனர்.

மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , கடல் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும். அதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும் பங்கேற்று இருந்தார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.