கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலையில் மாற்றம்

கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலகலில் மாற்றம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் சில்லறை விலைகள் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இதன் படி முட்டையொன்றின் விலை 26 முதல் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 650 ரூபாய் முதல் 850 ரூபாய் வரையிலான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உற்பத்தி அதிகரிப்பதன் காரணமாகவும் கேள்வி குறைவடைந்த காரணத்தினாலும் இவ்வாறு விலைகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.